Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உறவினர் செய்யும் வேலையா இது… 8 மாதம் கர்ப்பமான சிறுமி… போக்ஸோவில் கைது செய்த போலீஸ்.!

சொந்தக்கார சிறுமியை 8 மாதம் கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

வேலூர் அடுத்துள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் எட்வின். இவருக்கு வயது 30.. தனியார் நிதி நிறுவனம் ஒற்றில் பணிபுரிந்து  வரும் இவருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய சொந்தக்கார பெண்ணாண 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி 8 மாதம் கர்ப்பமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் சொந்தக்காரரான எட்வீன், அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அதனால் இவர் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து வயிறு வலி இருப்பதாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து  சிறுமியின் தாய் அவரை அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்ப்பதற்காகக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 மாதம் கர்ப்பிணியாகை இருப்பதாக கூறியுள்ளனர். இதை கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்தசம்பவம் குறித்து எட்வீன் மீது வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வேலூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் எட்வீனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Categories

Tech |