ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச்சென்ற இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவியை காணவில்லை என, அவரின் தந்தை, உமராபாத் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவியை தேடி வந்தனர்.. இந்தநிலையில் நேற்று முன்தினம் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே, சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்..
இந்த விசாரணையில், பிடிபட்டவன் ஆம்பூர் அடுத்துள்ள பந்தேரப்பள்ளி பகுதியை சேர்ந்த உமாபதி என்பதும், இதே பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. பின்னர் அவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் உமாபதியை கைது செய்தனர்.