சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்ததாக பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரில் வசித்து வருபவர் மாரியப்பன்.. இவருக்கு வயது 24.. இவர் மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்.. இதனால் மாரியப்பன் அடிக்கடி போதையில் வீட்டிலும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்..
இந்தநிலையில், நேற்று (ஜூலை 24) மாரியப்பன் தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டிலுள்ள மாட்டு தொழுவத்தை தீ வைத்து எரிக்க முயன்றுள்ளார்.. இதனால் கடும் ஆத்திரமடைந்த அவரது தந்தை கண்ணன் மற்றும் தாய் பூமாரி ஆகியோர் இணைந்து மாரியப்பனை அடித்து இழுத்து சென்று வீட்டின் முன்பு இருக்கும் மின் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் இறந்து விட்டார்..
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகன் மாரியப்பனை கொலை செய்ததாக பெற்றோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.