Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியூரில் கணவன்! நண்பனாக பழகி எடுத்துக்கொண்ட போட்டோவால் விபரீதம்.!!

தனது அருகில் நின்று சாதாரணமாக எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை உப்பிலியபாளையத்தில் வசித்து வருபவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) அவரின் கணவர் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ரேகாவின்  பக்கத்து வீட்டை சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜா என்பவர் அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணும் நட்பு ரீதியாக பழகியுள்ளார். அந்த பழக்கத்தில் ரேகா  ராஜாவின் அருகில் நின்று சாதாரணமாக சில போட்டோக்களை எடுத்துள்ளார்.

பின்னர் ஒருகட்டத்தில் ராஜா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரேகாவை  வலியுறுத்தியுள்ளார். அதற்கு சம்மதிக்காவிட்டால் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங்  செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜாவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |