Categories
உலக செய்திகள்

2ஆவது திருமணம் செய்யணும்… 5 பேரை துடிக்க துடிக்க கொன்ற கொடூரன்… மகளால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்..!!

எகிப்தில் 2ஆவது திருமணம் செய்வதற்காக தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொன்று விட்டு வீட்டையே கொளுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..

எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமான வேறொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நன்றாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ள நான் தயாராக இருக்கிறேன் என அந்தப்பெண் தெரிவித்துள்ளார்..

இதையடுத்து தன்னுடைய குடும்பத்தையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அந்த நபர்.. அதனை தொடர்ந்து தன் வீட்டிலிருந்த தாய், மனைவி மற்றும் 3 மகள்களை ஈவு இரக்கமின்றி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.. 4ஆவது மகளை கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். அதில் அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்… அவர் இறந்துவிட்டதாக நினைத்த அந்த கொடூர தந்தை கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு வீட்டையே  தீ வைத்து கொளுத்தியுள்ளார்..

இதற்கிடையே வீட்டிலிருந்து தப்பிச்சென்ற அந்த 4ஆவது மகள் (13 வயது) நடந்ததை எல்லாம் காவல் துறையினரிடம் தெரிவிக்க, இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு  வந்துள்ளது.. இதையடுத்து அந்த நபரை கைது செய்துள்ள நிலையில் அவர் குறித்த எந்த தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.. காவலில் எடுக்கப்பட்டு அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மட்டும் காவல் துறையினர்  தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கொலை சம்பவத்தில் இவர் திருமணம் செய்ய இருந்த  பெண்ணின் தூண்டுதலின் பேரில் இப்படி செய்தாரா? அந்த பெண்ணுக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரிக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. 2ஆவது திருமணத்திற்காக குடும்பத்திலுள்ள 5 பேரை கொலை செய்துவிட்டு வீட்டுக்கே தீ வைத்த சம்பவம் எகிப்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |