Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“100 சவரன் நகை”… இரவு நேரத்தில் கொள்ளை… ஒருவர் கைது… மற்றொருவருக்கு வலைவீச்சு…!!

தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இரவில் ஆளில்லாத பூட்டிய 3 வீடுகளில் தொடர் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதில் 100 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த அஜி என்ற அஜ்மீர் செரீப் என்ற இளைஞர் இந்தகொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவரிடமிருந்து 13 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் திண்டுக்கல் சிறையிலடைத்தனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த குற்றவாளியான சிவகாசியை சேர்ந்த மைதீன் என்பவர் மும்பையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை கைது செய்ய வன்னியம்பட்டி போலீசார் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |