சிதம்பரத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த நபரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே இருக்கின்ற பரங்கிப்பேட்டை சி.புதுப்பேட்டை என்ற கிராமத்தில் அக்னிவீரன்(52) என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த ஜூலை 24ஆம் தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளார்.. அதனைக் கண்ட சிறுமியின் தாய் அக்னி வீரனை திட்டிவிட்டு சிறுமியை மீட்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதி சிறுமியின் தாய் சென்ற 4 நாட்களாக காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமியின் தாய் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சிதம்பரம் சரக டிஎஸ்பி கார்த்திகேயன், பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் அக்னிவீரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.