மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 55 வயதுடைய நபர் ஒருவர், பசுவை அதன் தொழுவத்தில் வைத்து கடந்த ஜூலை 4ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிந்துள்ளதாக அசோகா கார்டன் காவல் நிலைய பொறுப்பாளர் அலோக் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார்.
மேலும் சபீர் அலி (sabir ali) என்ற அந்த நபர், சுந்தர் நகரிலுள்ள பசு தொழுவத்தினுள் புகுந்துள்ளார். இதனைப்பார்த்த தொழுவத்தின் உரிமையாளர் ராம் யாதவ் என்பவர் அவரை கண்டித்து அங்கிருந்து அனுப்பியுள்ளார். மறுநாள் தொழுவத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்ததில் பசுவை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இந்த பதிவுகளைக் கொண்டு ராம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார். இதையடுத்து இந்த கேவலமான மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட சபீர் அலியை கைதுசெய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.