பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் தீக்ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை கடந்த ஆறு நாட்களாகக் காணவில்லை என்று, அவரது தாய் லதா திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் கவிதா, பந்தநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா ஆகியோர் கடந்த ஆறு நாட்களாக பத்துக்கும் மேற்பட்ட நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காவல் துறைக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் அணைக்கரை விநாயகர் தெருவிலுள்ள ஒரு வீட்டில் அந்த மாணவி அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல் ஆய்வாளர்கள் கவிதா, சுகுணா ஆகியோர் மாணவியை மீட்டனர். விசாரணையில் கடந்த ஆறு நாட்களாக அந்த மாணவி தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தெரியவந்தது.
இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். மாணவனின் பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அந்த மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த, திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் சுகுணா ஆகியோர் நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சையிலுள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.