5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவன் கண்ணன்.. இவனுக்கு வயது 54 ஆகிறது.. இவன் தன்னுடைய வீட்டுக்கு அருகே வசித்து வரும் 5 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவுஅளித்துள்ளான்.பின்னர் இது குறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்..
அதனைத்தொடர்ந்து உடனே பெற்றோர் செம்பியம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் காமக் கொடூரன் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.