இரண்டரை வயது பெண் குழந்தையை 52 வயது நபர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் 26 வயது இளம்பெண் ஒருவர், கணவரை பிரிந்து இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.. இவர் தினமும் வேலைக்கு சென்று வருவதால் குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டின் அருகில் இருக்கும் பெண் ஒருவரை பணியில் சேர்த்துள்ளார்.. இந்தநிலையில், குழந்தையை பார்த்து வந்த பெண், ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியூருக்கு சென்று விட்டதால் அவரது கணவர் ராமுவிடம் குழந்தையை விட்டு விட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து வேலை முடிந்த பிறகு மாலை வீட்டுக்கு வந்த குழந்தையின் தாய், குழந்தையின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து குழந்தையை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.. பின்னர், அதிர்ந்து போன தாய் இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், ராமுவின் நண்பரான சக்திவேல்(52) என்பவன் அந்த குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, சக்திவேலை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.