82 கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளி லல்லு யாதவ் என்கிற வினோத் யாதவ். இவர் மீது 82 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் போலீசாரிடம் பிடிபடாமல் வெகுநாட்களாக தப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் மாவூ மாவட்டம் பான்வர்பூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று லல்லு யாதவை சுற்றி வளைத்துள்ளனர். அந்த சமயத்தில் லல்லு யாதவ் தனது துப்பாக்கியால் போலீசாரை சுட்டுள்ளார். அதன்பின் போலீசார் பதிலுக்கு பதிலாக துப்பாக்கியால் லல்லு யாதவை சுட்டுள்ளனர். இந்த என்கவுண்டரில் குற்றவாளி லல்லு யாதவ் குண்டு பாய்ந்து உயிர் இழந்தான்.