திருடப்படும் இருசக்கர வாகனங்களை கண்டறிய காவல்துறை சார்பில் புதிய செல்போன் செயலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது .
தமிழகத்தில் இரு சக்கர வாகனங்கள் ஆனது அதிகமாக திருடப்பட்டு வருகிறது. 1 லட்சத்திற்கும் மேல் உள்ள விலையுயர்ந்த வாகனங்களும் திருடர்களால் எளிமையாக திருடப்பட்டு விடுகிறது. வாழ்நாள் முழுவதும் உழைத்து கஷ்டப்பட்டு வாங்கும் வாகனம் எளிதில் திருடு போவதால் மக்கள் எந்த நேரமும் அச்சத்துடனே சென்று வந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் digicop2.0 என்ற செயலியை அனைவர் மத்தியிலும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த செயலியானது இருசக்கர வாகனம் தொலைந்த உடனே புகார் அளிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியிருக்கும்.
மேலும் வாகனம் திருடப்பட்டு புகார் அளித்த சில நாட்களுக்குள்ளேயே உடனடி தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த செயலி மூலம் சி எஸ் ஆர், எஃப் ஐ ஆர் உள்ளிட்ட தகவல்கள் பற்றியும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை தற்போது உயர் காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.இது அனைவராலும் தற்பொழுது பாராட்டுப் பெற்று வருகிறது