ராமநாதபுரம் மாவ`ட்டத்தில் அனுமதியின்றி மணலை அள்ளி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள வெள்ளையபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மணல் கொள்ளை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நரிக்கண் பொட்டல் பகுதியில் வெள்ளைப்புரத்தை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்ற 21 வயது இளைஞர் அப்பகுதி வழியாக டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் டிராக்டரில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் டிராக்டர் பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல் முஜிபூர் ரகுமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.