Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெவ்வேறு இடங்களில் வைத்து… 4 பேரை கைது செய்த போலீசார்… மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைத்து மது விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ரஹிம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியசாமி கோவில் அருகில் வைத்து சரவணன்(52) என்பவர் மது விற்பனை செய்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணன் கோவில் அருகே மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட போஸ்பாண்டி என்பவரையும் கைது செய்து அவரிடம் இருந்த 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அப்பாநாயக்கம்பட்டி இன்ஸ்பெக்டர் முருகன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் மது விற்பனை செய்த தங்க பாண்டியன் என்பவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்துள்ளனர். மேலும் குருலிங்காபுரம் அருகில் அனுமதியின்றி மது விற்பனை செய்த ராஜேஸ்வரன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 43 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |