Categories
தேசிய செய்திகள்

சாக்லெட் கொடுத்து சிறுமியை சீரழிக்க முயற்சி… இளைஞருக்கு வலைவீச்சு.!!

யாத்கிரில் 4 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த 23 வயது இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் யாத்கிர் பகுதியைச் சேர்ந்தவர் நிங்கப்பா (23). இவர் தனது வீட்டருகே வசிக்கும் 4 வயது சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.பின்னர், குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளார்.

Image result for rape attempt

அப்போது குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட பெற்றோர், சம்பவ இடத்திற்கு வரும் முன்னே குழந்தையை அப்படியே விட்டுவிட்டு அந்த இளைஞர் தப்பிச்சென்றார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் சூரபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் தப்பி ஓடிய நிங்கப்பாவை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Categories

Tech |