ஹரியானாவில் பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரியானாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மனோஜ் குமார் என்பவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மனோஜ் குமார் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பணிக்கு சென்றார்.. பின்னர், 9:30 மணியளவில் மனோஜ் பணியில் இருக்கும் இடத்திலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் அருகே உள்ள சக ராணுவ வீரர்களுக்கு கேட்டது..
இதையடுத்து, அந்தபகுதிக்கு உடனடியாக ராணுவ படையினர் விரைந்து சென்றனர்.. அங்கு மனோஜ் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கிடந்தார்.. பின்னர் உடனடியாக மனோஜை அருகிலிருக்கும் ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் அவரைபரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்..மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.