புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சப்தலிபுரம் கிராமத்தை சேர்ந்த 26 வயதுடைய தியாகு, கணியம்பாடி பாரதியார் நகரை சேர்ந்த 26 வயதுடைய சுரேஷ் என்ற தனஞ்செயன் ஆகியோர் மாடுகளை திருடிச் சென்றது தெரிந்தது.
அதனைத்தொடர்ந்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தியாகு மற்றும் சுரேஷ் ஆகியோர் சுற்றுவட்டாரத்திலுள்ள கிராமங்களுக்கு பகல் நேரத்தில் சென்று மாடுகள் எங்கெல்லாம் இருக்கிறது என்று நோட்டமிட்டு, பின் இரவு நேரங்களில் அப்பகுதிக்கு வேன்களில் சென்று மாடுகளை திருடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை 350க்கும் மேற்பட்ட பசுமாடுகளை திருடிச்சென்று விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.. அவர்களிடமிருந்து 7 பசுமாடுகள் மீட்கப்பட்டுள்ளன.