Categories
தேசிய செய்திகள்

சிறுவர் சீர்திருத்த பள்ளியில்… 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை… அதிரவைக்கும் சம்பவம்..!!

சிறுவர் சீர்திருத்த பள்ளியிலுள்ள 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி முகர்ஜி நகரில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்று இருக்கிறது.. இந்த பள்ளியில் பல்வேறு குற்றங்களை செய்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் இப்பள்ளியில் இருந்த 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் ஒருவன் மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்..

இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமானது.. பின்னர் அச்சிறுவனை சிகிச்சைக்காக சீர்திருத்த பள்ளி வளாகத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது தான் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்து கூறியுள்ளான்..

இந்த சம்பவம் குறித்து உடனே சீர்திருத்த பள்ளி அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அவர் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.. புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தான் கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவன், கூர்மையான ஆயுதத்தால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக அந்தசிறுவன் கூறியுள்ளான்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்டவனும், பாதிக்கப்பட்ட சிறுவனும் சீர்திருத்தப் பள்ளியில் தனித்தனியாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்..  வன்புணர்வு செய்த 17 வயது சிறுவன் ஒரு கொலை வழக்கு தொடர்பாக இங்கிருக்கிறார்.. பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிறுவன் மீது ஏற்கனவே சீர்திருத்த பள்ளியில் இருக்கும் மற்ற சிறுவர்களை எல்லாம் கொடூரமாக தாக்கியதாகவும், அவர்களை அச்சுறுத்தியதாகவும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. தற்போது அந்த 17 வயது சிறுவன் மீது ஐபிசி 377 சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |