Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் வெடித்து எலக்ட்ரீசியன் படுகாயம்… உண்மையா? அல்லது பொய்யா?… தீவிர விசாரணையில் போலீசார்..!!

இதில் அவரின் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனே அவரை அக்கமபக்கத்தினர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. செல்போன் பேச முயன்று பட்டனை அமுக்கும் போது வெடித்து சிதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ராணிப்பேட்டை டி.எஸ்.பி கீதா மற்றும் இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று வெங்கடேசனிடம் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக மாற்றி மாற்றி பதிலளித்தார். முதலில் செல்போன் வெடித்து காயமடைந்ததாக கூறிய அவர், பிறகு வீட்டின் அருகில் கழிவறை பக்கம் கிடந்த குப்பைக்கு தீ வைத்த போது, அதிலிருந்த கெமிக்கல் போன்ற ஒரு பொருள் வெடித்து சிதறியாதல் காயமடைந்ததாக கூறியுள்ளார்.

பின்னர் அவர் சொன்ன அந்த இடத்தையும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கிருந்த சில பொருட்களையும் எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெங்கடேசன் மாறி மாறி கூறியதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. செல்போன் வெடித்து காயமடைந்தாரா? அல்லது கெமிக்கல் வெடித்து சிதறியதால் காயாமடைந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் அவர் சொன்னது உண்மையா? அல்லது பொய்யா? என்பது தெரியவரும்.

Categories

Tech |