Categories
தேசிய செய்திகள்

“டிக் டிக் நிமிடங்கள்” இரு கைகளால் தூக்கிய போலீஸ்…. காப்பாற்றப்பட்ட உயிர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

மாரடைப்பு வந்த பெண்ணை போலீஸ்காரர் இரண்டு கைகளால் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூருக்கு வடகராவிலிருந்து படத்திலிருந்து ஜன் சதாப்தி எக்பிரஸ் இயங்கிவருகிறது. இந்த ரயிலில் அனிதா என்ற பெண் வடகரையில் இருந்து திருசூருக்கு சென்று கொண்டிருந்தார். ரயில் திருச்சூர் அருகே சென்று கொண்டிருந்த போது மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்த இந்த பெண்ணை கவனித்த மற்ற பயணிகள் இதனை ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து ரயில்வே போலீசார் அதிகாரிகள் திருச்சூர் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டுள்ளனர். அந்த ரயிலானது திருச்சூர் ரயில் நிலையத்திற்கு வந்த உடனே அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீசார் ஓமனக்குட்டன் வீல்சேர், ஸ்டச்சர் போன்றவைக்கு காத்திருக்காமல் மயக்க நிலையில் இருந்த அந்தப்பெண்ணை உடனடியாக மீட்டு கைகளில் தூக்கி கொண்டு ஓடினார். இதனையடுத்து ரயில் நிலையத்தில் தயாராக இருந்த டாக்டர்கள் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் திருச்சூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன் பின் மருத்துவமனையில் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ரயிலில் அந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்ட உடன் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அவரது உடல் உயிர் காப்பாற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சரியான நேரத்தில் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீஸ்காரர் ஓமனக்குட்டனை அனைத்து போலீஸ் அதிகாரிகளும் மருத்துவர்களும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் ஓமனகுட்டன் பெண் பயணியை இரண்டு கைகளால் ஏந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது.

Categories

Tech |