வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரட்டுபதி மலைவாழ் குடியிருப்பு பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகில் உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோகுல் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். அதில் அந்த சிறுமி கர்ப்பமானது உறுதியானது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்த போது தனது கற்பத்திற்கு கோகுல் தான் காரணம் என கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோகுலை கைது செய்துள்ளனர்.