போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காவல்துறையினர் சுடலையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.