சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிஇடம் பழகி வந்துள்ளார். இதனையடுத்து பாஸ்கர் அந்த சிறுமியிடம் திருமண செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்றுள்ளார். அதன்பின் பாஸ்கர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாஸ்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.