வாக்களிக்கும் முன் சிந்திக்க மறவாதீர்கள் என்றும், சிந்தித்த பின் வாக்களிக்க தவறாதீர்கள் என்றும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தனர். இதனையடுத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தியும் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் வாக்களிப்பது குறித்து கவிஞர் வைரமுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் “வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, அதிகாரத்தை கொடுக்கும் அதிகாரம். அன்பு கொடுக்க சிந்திக்கத் தேவையில்லை. ஆனால் அதிகாரத்தை கொடுக்க சந்திக்கத்தான் வேண்டும். எனவே வாக்களிக்கும் முன் சிந்திக்க மறக்காதீர்கள் என்றும், சிந்தித்த பின் வாக்களிக்க தவறாதீர்கள்” என்றும் கூறியுள்ளார்.