எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது .இது தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுடையது .அதனால் நமது தலையானது நல்ல ஆரோக்கியம் பெறும் .குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளிப்பது சிறந்தது . தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டி முடிக்கு நல்ல ஊட்டம் தரும் .


வேப்பிலை கொழுந்துடன் துளசி சேர்த்து நன்கு அரைத்து சாறு பிழிந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
மிளகுத் தூள் ஓர் அற்புதமான பொடுகைப் விரட்டும் மருந்து . இதில் உள்ள காரத்தன்மை நுண்கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை அழித்து, பொடுகு ஏற்படுவதைத் தடுக்கும் .சிறிது வால் மிளகை பொடி செய்து, நீரில் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலசி வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.