ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பூவேந்தநல்லூர் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் தாயார் இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து சேத்தியாதோப்பு காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் வெளியூரில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் காவல்துறையினர் கார்த்திகேயன் மீது வழக்குபதிந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.