நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து களமிறங்கி, தங்களின் பலத்தை நிரூபிக்க தீர்மானித்திருக்கிறது.
தி.மு.க.வின் கூட்டணியில் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை இருக்கிறது. அ.தி.மு.கவுடன் கூட்டணியிலிருந்த பாஜக தனித்து போட்டியிட தீர்மானித்த நிலையில், பா.ம.க.வும் தனித்து போட்டியிட தீர்மானித்திருக்கிறது.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற 6 கட்சிகள் தனித்து களமிறங்குகின்றன. வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருக்கும் பா.ம.க, சென்னை மாவட்டத்தின் சில வார்டுகளில் குறிப்பிடத்தக்க சில வாக்குகளை வைத்திருக்கிறது.
எனவே, தனித்து களமிறங்கி, தங்கள் பலத்தை நிரூபிக்க பா.ம.க முடிவெடுத்திருக்கிறது. குறிப்பாக, வட மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பா.ம.க அதிக ஆதிக்கத்தை செலுத்தும் என்று கூறப்படுகிறது.