பிரதம மந்திரியின் நாடு முழுவதும் வைஃபை வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகின்றது.
பிரதான் மந்திரி வயர்லெஸ் அக்சஸ் நெட்வொர்க் இன்டர்பேஸ் என்று திட்டம் இந்தியா முழுவதும் பொது இடங்களில் வைபை சேவையை வழங்கும் அமைப்பு ஆகும். இந்தத் திட்டத்திற்கு சமீபத்தில்தான் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. PM-WANI என்ற இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடி வேலைவாய்ப்புகள், சுயதொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 22 ஆம் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி வை-பை ஏற்பாடுகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட உள்ளது.
இதன் எண்ணிக்கை தற்போது 3.5 லட்சம். தற்பொழுது கோடிக்கணக்கான மக்கள் இன்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்தி வருவதால் இந்த தரவு கட்டணங்கள் வெகுவாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தற்போது 4ஜி கவரேஜ் நாட்டின் பல பகுதிகளுக்கும் அதை அளித்து அதிவேக இணைய சேவைகள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். புதிய பிராட்பேண்ட் இணைப்புக்கான உரிமை கட்டணம் இனி இருக்காது என அரசு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.