இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்புக்கு பின் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் தொடர்பில் உரையாற்றயிருக்கிறார்.
இத்தாலியில் உள்ள ரோம் நகரத்தில் 16வது ஜி-20 அமைப்பின் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா போன்ற 20 வளரும் நாடுகள் பங்கேற்கிறது. இத்தாலி நாட்டின் பிரதமரான, மரியோ டிரகி அழைப்பு விடுத்ததால் பிரதமர் மோடி இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.
இத்தாலி நாட்டின் தலைமையில் நடக்கும் இந்த ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்பிற்கு பின் இருக்கும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், உணவு பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி இம்மாநாட்டில் உரையாற்ற உள்ளார். அவர் கொரோனா பாதிப்புக்கு பின் உள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை தொடர்பில் உரையாற்றவிருக்கிறார்.