Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழலில் உதவி…. பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி… -ரணில் விக்ரமசிங்கே…!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு உதவிகள் அளித்ததற்கு நன்றி கூறியிருக்கிறார்.

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால், அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தீவிர போராட்டங்களில் களமிறங்கினர். நெருக்கடி அதிகரித்ததால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தருப்பினார்.

அதன் பிறகு, ரணில் விக்ரமசிங்கே நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் நிதி நெருக்கடிக்கு எதிரான மக்களின் போராட்டம் அடங்கவில்லை. உலக நாடுகள் உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் உரங்கள் போன்றவற்றை இலங்கைக்கு வழங்கி உதவி கொண்டிருக்கின்றன.

இதில், இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்ததாவது, நம்முடன் நெருங்கிய உறவில் இருக்கும் பக்கத்து நாடான இந்தியா நம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல உதவிகள் செய்திருக்கிறது. நம் நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு தகுந்த உதவிகள் அளித்திருக்கிறது.

என் நாட்டு மக்கள் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |