Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : ஹோலி கொண்டாட்டத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி …!!

பிரதமர் நரேந்திர மோடி ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

வருடாவருடம் ஹோலி பண்டிகை வட இந்தியாவிலே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கும் இந்த பண்டிகையில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடி , ஒன்றாக சேர்ந்து கொண்டாடுகிறார்கள். அதாவது ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களை பூசிக்கொள்வது,  இனிப்புகள் பரிமாறி கொள்வது என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கொரோனா வைரஸ் பரவுவதை மேலும் அதிகரிக்கக்கூடும்.

இதனால் பிரதமர் நரேந்திர மோடி ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க போவதில்லை என்று ட்வீட்டர் மூலமாக தெரிவித்துள்ளார்கள். அவர் தெரிவித்த கருத்தில் ஹோலி பண்டிகை தொடர்பான கொண்டாட்டங்கள் எதிலும் அவர் கலந்து கொள்ள போவதில்லை என்பதை அவர் தெரிவித்திருக்கிறார். பொது மக்களும் அதிக அளவில் ஒன்றுகூடினால் கொரோனா பரவும் என்று சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் மோடி ஹோலி கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளார்.

Categories

Tech |