Categories
Uncategorized

மோடி தமிழ்நாட்டிற்கு வாராரா? இல்லையா…? எழுந்துள்ள குழப்பம்…. தமிழக அரசு என்ன சொல்கிறது….?

பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ஆம் தேதி அன்று மருத்துவ கல்லூரிகளை திறக்க தமிழகம் வருகிறாரா? என்று தமிழக அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு வந்தபோது, பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனை நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, தற்போது பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவதை ரத்து செய்திருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதாவது, வரும் 12ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு வந்து, பாஜக சார்பில் நடக்கும் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கும் விழாவில் பங்கேற்பார் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பாஜக தலைவரான அண்ணாமலை, “மோடி பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது” என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், அந்த நிகழ்ச்சியை தள்ளி வைத்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.  இந்நிலையில், அரியலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் நாகை போன்ற பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் 11 மருத்துவ கல்லூரிகளை திறப்பதற்கு வரும் 12ஆம் தேதி அன்று மோடி வருவாரா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

இந்நிலையில், அந்த நிகழ்வு தமிழ்நாடு அரசு சார்பாக நடக்கிறது. எனவே, அதில் மோடி கலந்து கொள்கிறாரா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்நாடு அரசு தான் விளக்கம் தர வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

Categories

Tech |