ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளின் pm-kisan இன் 11 வது தவணை வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகள் இப்போது பிஎம்கிசான் திட்டத்தின் 11 வது தவணைக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த திட்டத்தின் பத்தாவது தவணைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் விதிமுறைகளை சென்ற ஆண்டில் மத்திய அரசு மாற்றியிருந்தது. அதன்படி விவசாயிகள் இப்போது பதினோராவது தவணைக்கு e-Kyc வேலையை முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காது. விரைவில் 11வது அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. e-KYC இல்லாவிட்டால் உங்கள் தவணை பணம் வருவதில் சிக்கல் ஏற்படலாம்.
மேலும் விவசாயிகள் pm-kisan வெப்சைட்டில் ‘former corner’ வசதியில் e-kyc விருப்பத்தை கிளிக் செய்து ஆதார் அடிப்படையிலான otp சரிபார்ப்பு முடித்துக் கொள்ளலாம். பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் உங்கள் மொபைல், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்றவற்றிலும் வீட்டில் அமர்ந்தபடியே இந்த வேலையை முடித்துக் கொள்ளலாம். ஆதார் அடிப்படையிலான otp சரிபார்ப்புக்கு https://pmkisan.gov.in/ என்ற pm-kisan வெப்சைட்டில் உள்ள பார்மர் கார்னர் வசதியில் உள்ள ‘eKYC’ கிளிக் செய்து அப்டேட் செய்யலாம். உங்களுடைய விண்ணப்ப நிலையும் பிஎம்கிசன் வெப்சைட்டில் சென்று நீங்கள் பார்க்க முடியும். உங்களுக்கு பணம் வருமா வராதா என்பதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஏப்ரல் மாதத்தில் 11 வது தவணை வரும் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்குள் பயணிகள் இந்த வேலையை முடித்தாள் மிகவும் நல்லது.