Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் 3வது பெண் பிரதமர்…. தனது முதல் வாரத்தில்…. அமலுக்கு கொண்டு வரும் புதிய திட்டங்கள்…. எதிர்பார்ப்பில் மக்கள்….!!!!

பிரதமரான முதல் வாரத்திலேயே லிஸ் ட்ரஸ் அமலுக்கு கொண்டுவரும் திட்டத்தின் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வாகி இருக்கும் இந்த வேலையில் தனது முதல் வாரத்திலேயே அமலுக்கு கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இதில் விலைவாசி உயர்வால் கடும் அவதியில் இருக்கும் பிரித்தானிய மக்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கும் வகையில் 100 பில்லியன் பவுண்டுகள் நிவாரண திட்டம் மற்றும் வரிக்குறைப்பு உள்ளிட்டவைகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது முதல் வாரத்திலேயே முக்கிய முடிவெடுக்கப்படும் என தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது லிஸ் ட்ரஸ் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல அவர் பிரதமராக தேர்வாகி இருக்கும் இந்த நேரத்தில் எரிசக்தி கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லிஸ் ட்ரஸ் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவின் மொத்த விலையை கட்டுப்படுத்தி எரிசக்தி கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளதாக லிஸ் ட்ரஸ் கருதுகிறார். ஆனால் இந்த முடிவால் பல பெரிய நிறுவனங்கள் பெரும் இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் தரப்பில் இருந்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரிட்டனை பற்றி லிஸ் ட்ரஸ் கூறியதாவது “நமது நாட்டை இனி எவரும் மட்டம் தட்ட அனுமதிக்க முடியாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் வாய்ப்பும் அவர்களின் திறமைக்கு முக்கியத்துவமும் அளிக்கப்படும்” என அவர் கூறியுள்ளார். பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமராக பதவி ஏற்கும் லிஸ் ட்ரஸ் நாளை ஸ்காட்லாந்துக்கு சென்று பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசெபெத்தை சந்திக்க உள்ளார்.

மேலும் புதிய அமைச்சரவையில் இருக்க கூடிய நபர்களின் பட்டியலையும் அவர் தயாரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பிரிட்டனின் மிக முக்கியமான நான்கு பொறுப்புகளுக்கு வெள்ளையர்கள் அல்லாதவர்களுக்கு லிஸ் ட்ரஸ் வாய்ப்பளிக்க இருப்பதாகவும் சேலன்ஸர் பொறுப்புக்கு Kwasi Kwarteng தேர்வு செய்யலாம் எனவும் வெளிவகார அமைச்சராக James Cleverly நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் உள் விவகார செயலராக Suella Braverman தேர்வாகலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |