Categories
தேசிய செய்திகள்

ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகம் எப்போதும் மறக்கப்படாது. நாட்டு மக்களை காக்க அவர்கள் முழு ஈடுபாட்டுடன் அயராது உழைத்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். ராணுவ வீரர்களை பார்த்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

இந்த சண்டையில் 4 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். ராணுவ கர்னல் அசுடோஷ் சர்மா, மேஜர் அனுஜ் உள்பட ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவல் துணை ஆய்வாளர் சகீல் குவாஸி உள்ளிட்ட 5 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |