மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது.
இதில் ஆதார் கார்டு மூலம் விவசாயிகளின் கணக்கு சரிபார்க்கப்பட்ட பிறகு, கடந்த 6 மாதங்களில் சுமார் 2 கோடி விவசாயிகள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடுத்த தவணை பணம் கிடைக்காது. மேலும், அரசியலமைப்பு பதவிகளில் பணிபுரியும் விவசாயிகள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறும் விவசாயிகளுக்கும் கிடைக்காது.