Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன சொல்லணுமோ சொல்லிக்கோங்க…. எங்களுக்கு கவலையே கிடையாது…. மாஸ் காட்டிய முக.ஸ்டாலின் …!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவை  கண்டித்து திமுக கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில், திமுக போராட்டத்தை தூண்டி விடுகின்றது என சிலர் தவறான விமர்சனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன விமர்சனம் செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை,  மக்களுக்கு விரோதமான எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் நாங்கள் அதை துணிச்சலோடு எதிர்ப்போம்,  அதை தட்டிக் கேட்ப்போம், அதை கண்டிப்போம்,  அதை எதிர்த்து போராடுவோம். இதில் எந்த தயக்கமும் கிடையாது.

விவசாய சட்டங்களை நாங்கள் மட்டுமா எதிர்க்கின்றோம். பஞ்சாப் மட்டுமா எதிர்க்கிறது… இந்தியாவே எதிர்த்து கொண்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலம் மட்டுமல்ல… அரியானா, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருக்கக்கூடிய கட்சிகள், அந்த மாநிலங்கள் இருக்கக்கூடிய விவசாயிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் வேளாண் மசோதாவை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் சாலைமறியல் நடக்கின்றது. அனைத்து மாநிலத்திலும் இருக்க கூடிய அனைத்து விவசாயிகளும், அமைப்புகளும் ஒன்று சேர்ந்து  போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

ஹரியானாவில் ரயில் மறியல்  போராட்டம், தண்டவாளத்தில் படுத்து தூங்குங்குக்கிரார்கள்,  தண்டவாளத்தில் சமைச்சு சாப்பிட கூடிய போராட்டம் நடைபெறுவதை நாம் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு விவசாயிகளிடையே ஊர்வலம் போய்கிட்டு இருக்காங்க. கேரளாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு முன்னால் போராட்டம் நடக்குது. இப்படி ஒட்டுமொத்த இந்தியாவே இதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது.

வேளாண் சட்டத்துக்கு எதிராக கேரள மாநிலம் வழக்கு போட போறோம்னு சொல்லி இருக்கு. அதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். நான் கூட குறிப்பிட்டு சொன்னேன்… பக்கத்தில் இருக்கக்கூடிய கேரள மாநிலம் எதிர்த்து நீதிமன்றத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசும், எடப்பாடி தலைமையில் அதிமுக அரசும் விவசாய மசோதாவை எதிர்த்து வழக்கு போட முன் வரவேண்டும். இல்லை என்று சொன்னால் எதிர்க்கட்சியாக இருக்க கூடிய நாங்களே… தமிழ்நாட்டு மக்கள் சார்பாக, தமிழக விவசாயிகள் சார்பில் நீதிமன்றத்திற்குச் செல்ல தயாராக இருக்கிறோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.

Categories

Tech |