உலகின் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் ப்ளூ டிக் பயன்படுத்தும் பிரபலங்களுக்கு மாத கட்டணம் வசூலிக்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். அதன்படி 8 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 640 மாத கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மஸ்க்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தெரிவிக்கட்டும். ஆனால் அதற்கும் 640 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிபி சக்கரவர்த்தி தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது இவர் எலான் மஸ்கின் பதிவை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து உங்களுடைய கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள் என்று நக்கலாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Pls send me your Gpay number. https://t.co/BXhd1aaCJF
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 2, 2022