திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு அண்ணன் அவர்கள் என்னென்ன நல்லது செய்கிறார்கள், அதை எங்களுடைய மாவட்டத்திற்கு தகுந்தாற்போர் நாங்கள் செய்யக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நாங்கள் அதை பெற்று இருக்கிறோம் என்று சொல்லும்போது, அந்த உத்வேகத்தை நாங்கள் பெறுகின்றோம்.
தொடர்ந்து நம்முடைய அண்ணன் சேகர்பாபு அவர்கள், இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவர் உரிமையோடு என்னை அழைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்றைக்கும் ஒரு இயக்கத்தினுடைய தலைவராக நம்முடைய தளபதி அவர்கள் இருக்கின்றார். தமிழ்நாட்டை ஆளக்கூடிய மாண்புமிகு முதலமைச்சராக இருக்கிறார் என்று சொன்னாலும், இன்றைக்கும் தன்னை ஒரு செயல்வீரராக பார்க்கக்கூடியவர்தான் நம்முடைய தலைவர் அவர்கள்.
ஏன் நம்முடைய திராவிட மாடல் புத்தகத்திலிருந்து பல செய்திகளை செல்கிறார். திராவிட மாடல் புத்தகத்தை பொருத்தவரைக்கும்… நீங்கள் ஒவ்வொருவரும் அந்த புத்தகத்தை வாங்கி தயவு செய்து ஒரு முறை படியுங்கள். நம்முடைய இளைஞர் அணியை சார்ந்திருக்கின்ற தம்பிகளுக்கு, இளைஞர் அணி செயலாளர் சார்பாகவே நான் சொல்கின்றேன், இந்த திராவிட மாடல் புத்தகத்தில் அவருக்கு இருக்கின்ற அந்த சிந்தனைகள். அதெல்லாம் எடுத்து பாருங்கள் ..
அதையெல்லாம் பார்க்கும் போது, எப்படிப்பட்ட தலைவர் ? கலைஞர் ஒன்றும் வெற்றிடம் விட்டுவிட்டு செல்லவில்லை. அவருக்கு பிறகு தலைவராக வந்து, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நான்கு தேர்தலில் வெற்றி கண்டிருக்கிறார் என்று சொல்லும்போது, வெற்றிக்கான இடத்தை தான் அவர் விட்டு சென்று இருக்கிறார். அதுவும் நம்முடைய இயக்கத் தலைவரிடம் விட்டு சென்றிருக்கிறார் என்பது மிகப்பெரிய பெருமை. ஆக அந்த வகையில் உங்களுடைய சேர்ந்து சென்னை கிழக்கு மாவட்டத்தோடு சேர்ந்து, எங்களுடைய திருச்சி தெற்கு மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகமும் சேர்ந்து சொல்கிறோம். வாழ்க தலைவர், வெல்க தமிழர், வளர்க திராவிட மாடல் ஆட்சி என பேசி முடித்தார்.