செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட்டால் தங்கச்சி அனிதா இறக்கும்போது திமுக எதிர்க்கட்சியாக இருக்குது. அப்போது திமுகவினர் எப்படி பேசுனாங்க ? அப்படின்னு தெரியும். அதே மாதிரி காவல்நிலைய மரணங்கள் எல்லாம் இவர்களுடைய ஆட்சியில் எவ்வளவு நடக்குது. ஆனால் பென்னிக்ஸ் – ஜெயராஜ் காவல்துறை மரணத்துக்கு திமுக எப்படி பேசினாங்க ? அப்படின்னு தெரியும்.
நான் என்ன சொல்லுவேன் அப்படின்னா… பிள்ளைகளுக்கு நான் அன்பாக வேண்டிக் கொள்வது என்னவென்றால் ? உயிரைக் கொடுக்கிறதுனால இங்க ஒன்னும் நடக்க போறது இல்ல. உயிருக்கு மதிப்பளிக்காத அரசாங்கம் இது. இதனால நம்ம உயிரை கொடுத்து என்ன நடக்கப்போவது ? எத்தனை பிள்ளைகள் இறந்து போயிட்டாங்க,
அது என்ன கொடுமை அப்படின்னு பாத்தீங்கன்னா… மற்ற மாநிலங்களில் இது போல உயிர் பலி நடக்குறது இல்ல. ஏன்னா அவங்க தேர்வில் பார்த்து எழுதணும்னு நினைக்கிறான். இங்க நம்ம பிள்ளைகளை மூக்குத்திய கழத்து, தோட கழத்து, துப்பட்டாவை கழத்து, உள்ளாடையை கழத்து இப்படினு சொல்லுறாங்க.
அமெரிக்காவில் இருக்கிற ”புரோ மெட்ரிக்” என்ற தனியார் நிறுவனத்திற்கு இந்த நாட்டினுடைய மருத்துவ கல்வியின் தரத்தை உயர்தனும் அப்படின்னு என்ன தேவை இருக்கு? அவன் எதுக்கு இங்க தேர்வு நடத்துறான் ? தேர்வு நடத்துவது ஒரு அமெரிக்க நிறுவனம் எதுக்கு இங்க வந்து தேர்வை நடத்தணும் ? அதனால நம்ம பிள்ளைகள் உயிரை கொடுக்கிறதை நிறுத்திடலாம் என தெரிவித்தார்.