Categories
தேசிய செய்திகள்

ஒரு “பிளாட்பார்ம் டிக்கெட்” விலை இவ்ளோவா?… ரயில்வே துறை அறிவிப்பு…!!

மக்கள் கூட்டத்தை தவிர்க்க பெங்களூர் ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் தொடங்கி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுபோக்குவரத்து சேவை செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கர்நாடக மாநிலம் பெங்களுரூ ரயில் நிலையத்தில் நடைமேடைக் கட்டணத்தை உயர்த்தியது.

இது குறித்த அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே துறை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதாவது இதற்கு முன் நடைமேடைக் கட்டணம் 10 ரூபாயாக இருந்து வந்தது. ஆனால் இப்போது 50ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டண அதிகரிப்பு, கே.எஸ்.ஆர் பெங்களூரு, பெங்களுரூ கண்டோன்மென்ட் மற்றும் யேசவந்த்பூர் ரயில் ஆகிய நிலையங்களுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |