தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற மதிப்பை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர் சங்கம் வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமரவில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் செய்த பொருட்கள் மண் குடுவை போன்ற என்னென்ன பொருட்கள், எங்கெங்கு கிடைக்க வேண்டும் என்பது குறித்து பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பிளாஸ்டிக் தடை அமல்படுத்த தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார். உயர்நீதிமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் இயந்திரங்களை அக்டோபர் 28ஆம் தேதி வைக்கப் போவதாக உயர்நீதிமன்ற உத்தரவுபடி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மாற்றுப் பொருட்கள் குறித்து பிரபலப்படுத்துவது குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஒரு முறை பயன்படுத்த பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்றும் அதன் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது என்றும் அதை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்கள் எத்தனை இயங்குகின்றன என்று கேள்வி எழுப்பினர்.
அதுமட்டுமில்லாமல் பதிவு செய்யப்படாமல் செயல்படும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட வேண்டும் என்றும் எத்தனை நிறுவனங்கள் உள்ளன என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர். அப்போது 180 நிறுவனங்கள் மூடப்படாததாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வழக்கறிஞர் பதிவு நிகழ்ச்சி முடிந்த பிறகு அதிக பிளாஸ்டிக் பயன்படுத்துவதாகவும், நிகழ்ச்சிக்கு பிறகு உயர்நீதிமன்ற வளாகம் குப்பை காடாகி விடுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனார். அப்போது பார் கவுன்சில் தலைப்பில் வழக்கறிஞர்கள் எம்.வேல்முருகன், சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகி, இது குறித்து வழக்கறிஞர் பதிவுக்கு குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததுடன், முதன்முறை பட்டதாரி என்ற முறையில் பாராட்ட வருவோரும் குடும்பத்தினரும் பரிசுப் பொருட்களை வாங்கி வருவதாக குப்பை சேர்வதாக தெரிவித்தனர். இதனைதொடர்ந்து வழக்கறிஞர் பதிவு செய்பவர்களை மட்டும் நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதிக்க கூடாது என பரிசீலிக்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை வெளியிடும் படி சென்னை மாநகராட்சி நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.