Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதல் முறை… நிலவின் மண்ணில் வளர்க்கப்பட்ட செடி…. நாசா விஞ்ஞானிகள் அசத்தல்…!!!

நிலவில் கிடைத்த மண்ணிலிருந்து செடிகளை வளரச்செய்து வரலாற்றிலேயே முதல் தடவையாக நாசா விஞ்ஞானிகள் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

அப்பல்லோ விண்கலமானது சந்திரனிலிருந்து பெறப்பட்ட மண் மாதிரிகளை பூமிக்கு அனுப்பியிருந்தது. அதனை வைத்து செடிகளை வளர்ப்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன்படி செடி ஒவ்வொன்றுக்கும் ஒரு கிராம் அளவு கொண்ட நிலவின் மண்ணை ஆராய்ச்சியாளர்கள் ஒதுக்கினர்.

அதனோடு, செடிகளின் இலைகளையும் நீரையும் சேர்த்திருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து சுத்தமான அறைக்குள் ஒரு கண்ணாடிப் பெட்டியில் அதனை வைத்திருக்கிறார்கள். அந்த மண்ணில் ஊட்டச்சத்து குறைவு. எனவே ஒவ்வொரு நாளும் அதில் திரவத்தை சேர்த்திருக்கிறார்கள்.

அதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களில் விதைகள் முளைத்து விட்டது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனினும், ஆறு நாட்கள் கழித்த பின் தான், பூமியில் விளையக்கூடிய செடிகளைப் போல அந்த செடிகள் வலுவுடன் இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த செடிகள் மிகவும் மெதுவாக வளர்ந்திருக்கிறது. வேர்களின் வளர்ச்சியும் சரியாக இல்லை. செடிகள் ஒரு சிலவற்றில் இலைகளும் வளர்ச்சியடையாமல் இருந்திருக்கிறது. மேலும், சிவப்பு நிறத்தில் புள்ளிகள் இருந்ததாக நாசா தெரிவித்திருக்கிறது.

நாசாவின் நிர்வாகியான பெல் நெல்சன் தெரிவித்ததாவது, விண்வெளியில் ஆழ்ந்த பகுதியில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் வருங்கால விண்வெளி வீரர்களுக்கு, நிலவு மற்றும் செவ்வாயிலிருந்து பெறக்கூடிய வளங்களை வைத்து தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்ய இந்த ஆய்வு முடிவுகள் தேவைப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |