Categories
அரசியல்

ஆளுநர் கிரண்பேடி தலைமையில் திட்டக் குழுக் கூட்டம்…!!!

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் திட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 

புதுச்சேரியில் இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள  நிலையில் தற்போதைய நிதி ஆதாரம்,துறை வாரியாக நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க கடந்த ஆறாம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடந்தது.

Related image

ஆனால் அந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததை கண்டித்து முதலமைச்சர் ,அமைச்சர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், விடுபட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீண்டும் திட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி ,அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர் .இதனை தொடர்ந்து துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கருப்புச்சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.

Categories

Tech |