Categories
உலக செய்திகள்

உணவகத்தின் அருகில் வெடித்து சிதறிய விமானம்.. உறவினரை காணச்சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!!

பிரான்சில் உணவகத்தின் அருகே விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் Bondues aerodrome-என்ற பகுதியிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அந்நகரத்திற்கு அருகில் உள்ள லில்லி என்ற நகரின் Wambrechies  பகுதியிலுள்ள உணவகத்தின் அருகில் விழுந்து வெடித்து சிதறியது. விமானம் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த விமானத்தில் மூவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்கள் உறவினர் ஒருவரை பார்க்க சென்றபோது விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று விமானத்தில் எரிந்த தீயை அணைத்திருக்கிறார்கள். நல்லவேளையாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Categories

Tech |