Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…”வாய்ப்புகள் வந்து சேரும்”.. தடைகள் விலகி செல்லும்…!!

மீனம் ராசி அன்பர்களே…!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வங்கி சேமிப்பு உயரும். பொது வாழ்வில் புகழ் கூடும். விருந்தினர் வருகை உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும், போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

இன்று உத்தியாகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான சூழலும் இன்று கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்படக்கூடிய சுழலும் இருக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்களும் நடந்தேறும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெளிர் மஞ்சள் நிறம்

Categories

Tech |