மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சிறிய வேலை ஒன்று அதிக சுமையாக மாறக்கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரின் ஆலோசனை உதவும். சுமாரான அளவில் பணம் கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் கூடுமானவரை இன்று சிறப்பாகத்தான் இருக்கும்.
அதேபோல தீவிரமுயற்சி உங்களுக்கு வெற்றியை கொடுப்பதாக அமையும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் சரியாகும், அதாவது பூர்த்தியாகும். எதிர்ப்புகளும் நீங்கும் தைரியம் கூடும். பணவரவு சிறப்பை கொடுக்கும். நட்பு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று கணவன்-மனைவிக்கிடையே பாசமும் அன்பும் மிகுந்து காணப்படும்.
இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் செய்யும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்