மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பிரிட்டனில் 30 வயதுக்கு மேலான அனைவருக்கும் மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். அதாவது, தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட மற்றும் வேகமாக பரவும் தன்மை உடைய ஒமைக்ரான் தொற்றின் காரணமாக இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த அறிவிப்பின் மூலம் 30 முதல் 39 வயது வரையில் உள்ள 75,00,000 பேர் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் 35,00,000 பேருக்கு இன்றிலிருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.