தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட் படங்களைத் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் என்ற இரு படங்களும் மெகா ஹிட் அடித்தது. இவர் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வழக்கமான சிவகார்த்திகேயன் படங்களைப் போலவே ஜாலியான காதல் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா, சத்யராஜ், பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி ஆகியோர்கள் நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பிரின்ஸ் படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் அனுதீப் பேசியது, என்னுடைய முந்தைய படமான ‘ஜதி ரத்தினலு’ முடித்துவிட்டு இதன் திரைக்கதை எழுதும் போது சிவா சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சிவா சாருக்கு என்னுடைய ரத்தினாலு படம் பார்த்து பிடித்திருந்தது. அவரிடம் பேசும் போது காமெடி மட்டும் இல்லாமல் நல்ல மெசேஜ் இருக்க வேண்டிய கதையாக வேண்டும் என்றார். இந்த படம் ஒரு பண்டிகையை மூடில் எல்லோரும் ரசித்துக் கொண்டாடும் விதமாக வந்துள்ளது. இதற்கு முன்பு பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோரின் நிறைய தமிழ் படங்களை பார்த்து இருக்கிறேன். எனக்கும் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இந்த வாய்ப்பை இவ்ளோ சீக்கிரம் கொடுத்த சிவா சாருக்கு நன்றி. தீபாவளியன்று எல்லோரும் திரையரங்கில் இந்த படத்தை ரசித்து மகிழுங்கள் என்று தெரிவித்துள்ளார்.